search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் கொள்ளை"

    அமைந்தகரையில் அழகு நிலையத்தை நடத்தி வரும் பெண்ணை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    சென்னை:

    அமைந்தகரை மேத்தா நகர் ராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கேஸ்வரி. அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10.30 மணிக்கு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேத்தா நகர் மெயின் ரோட்டில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராமலிங்கேஸ்வரி வந்த மொபட்டின் மீது மோதினர்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமலிங்கேஸ்வரியிடம் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு சென்றனர். அந்த பையில் 6 சவரன் நகை 14ஆயிரம் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த ஐபோன் ஆகியவை இருந்தது.

    கொள்ளையர்கள் தள்ளி விட்டதில் ராமலிங்கேஸ்வரிக்கு முகம் மற்றும் உதடு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வீடு புகுந்து பெண்ணிடம் 13 1/2 பவுன் நகையை ஹெல்மெட் அணிந்து வந்த திருடர்கள் பறித்துச் சென்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள டி.கருங்குளத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மனைவி அம்பிகாவதி (வயது 40). உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்கு சென்ற இவர், இரவில் வீடு திரும்பினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்து கணவன்-மனைவி இருவரும் தூங்கினர்.

    இன்று அதிகாலை 4 இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். கருப்பு நிற உடை அணிந்திருந்த 4 பேரும் தலையில் ஹெல்மேட் போட்டிருந்தனர். அவர்கள் அம்பிகாவதி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.

    இதனால் திடுக்கிட்டு அம்பிகாவதி கண் விழித்த போது ஹெல்மெட் அணிந்து 4 பேர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் 4 இளைஞர்களும் அவரது கழுத்தில் கிடந்த 13 1/2  பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    அம்பிகாவதியின் கூக்குரல் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர். ஆனால் அதற்குள் ஹெல்மெட் திருடர்கள் மாயமாகி விட்டனர்.

    இந்த துணிகர கொள்ளை குறித்து சத்திரக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து ஹெல்மெட் திருடர்களை தேடி வருகிறார். சம்பவ இடத்திற்கு துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதேபோல் சத்திரக்குடி இலந்தகுளம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராமசுப்பிரமணியன், வீட்டில் கதவை திறந்து வைத்து தூங்கினார்.

    அப்போது அவருடைய கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×